Wednesday, 11 April 2012

ஞாபகத்தின் பின்னல்கள்





ஞாபகத்தின் பின்னல்கள்
சுழற்சி முறையில் வந்து போகும் மனிதர்கள்


சுற்றும் கடிகாரத்தில்
சுகமான கனவு முட்கள்

மனதின் மூலையில்
மறைந்த மனித முகங்கள்

யாசித்த வாசகத்தில்
சுவாசத்தின் உயிர் மூச்சுகள்



நான் என்றும் நீ என்றும் இருக்கிறதா….
எதுவும் இல்லாத நிலை என்றும் இருக்கிறதா….
இல்லாத நிலையில் உயிர் உலவுகிறதா….
இருக்கும் நிலையில் மட்டும் ஏதாவது இருக்கிறதா….

புதிரான இந்த உலகில் புரியாத பார்வைகள்
மெய் என்றும் பொய் என்றும் இரு வேறு அர்த்தங்கள்
ஏற்பதா வேண்டாமா என்று சஞ்சலங்கள்
முடிவில் தோற்கும் நம் மனக்குதிரைகள்….. 



7 comments:

  1. காலிப்பெருங்காய டப்பா, வெங்காயம்................ஸ்டாப் ஸ்டாப்
    இது எல்லாம் எதுக்கு ஞாபகத்துக்கு வருது ஹி ஹி ஹி

    ReplyDelete
  2. அவங்கவங்களுக்கு எது பிடிக்கிறதோ, அதுதான் ஞாபகத்திற்கு வரும்........

    ReplyDelete
  3. பின்னல்கள் நிறைந்த இவ்வாழ்வில்..
    சஞ்சலங்கள்
    ஏற்படுவது நிதர்சனமே..
    பொய்யென்றும் மெய்யென்றும்
    இருவேறு நிலைப்பாட்டுடன்
    விழிகள் நோக்குகையில் அதன்
    தன்மை விழிகளின் ஓட்டத்தில் தெரிந்துவிடும்.
    ஞாபகங்களின் பின்னலாய்
    மனக்குதிரைகள் தன் வேகம் தளர்த்தி
    பின் வாங்க வைக்காது
    கடிவாளம் பிடித்து
    முன்னோக்கி செல்ல வேண்டும்..

    அருமையான கவிதை சகோதரி..

    ReplyDelete
    Replies
    1. கவிதையான உங்கள் பதில்....
      மனக்குதிரைகளை கடிவாளத்திற்குள் கொண்டு வந்துவிட்டதே.....

      Delete
    2. நன்றி மகேந்திரன்....

      Delete
  4. //புதிரான இந்த உலகில் புரியாத பார்வைகள்
    மெய் என்றும் பொய் என்றும் இரு வேறு அர்த்தங்கள்
    ஏற்பதா வேண்டாமா என்று சஞ்சலங்கள்
    முடிவில் தோற்கும் நம் மனக்குதிரைகள்…..//
    எங்க ஊரில் இருந்து வந்துட்டு என்ன இவ்வளவு பெரிய யோசனை ..அம்முனி கண்ணை பாரு உண்மை தெறிக்கும் ....sorry to use call அம்முனி,

    ReplyDelete
  5. யோசனைக்கும் ஊருக்கும் சம்பந்தம் உண்டா என்ன....

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....