Friday, 23 March 2012

புறாவும் சமாதானமும்...

பொதுவுடைமையாக...


நான் இல்லாத இந்த ஒரு மாத இடைவெளியில் 
என் விட்டு முற்றத்தின் மேல் தட்டில் 
நீயும் உன் துணையும் குடியும் குடித்தனமுமாய்
சுத்தப்படுத்த முடியாத அளவுக்கு 
சிறகுகளும் எச்சங்களும் மிச்சங்களுமுமாய் 
சரிசெய்ய ஒரு நாள் பொழுதாயிற்று எனக்கு 
பக்...பக்...என்ற சத்தத்துடன் மீண்டும் நீ 
நான் வந்தபிறகும் பயமில்லாமல் 
என் முன்னே கம்பியில் அமர்ந்து 
என்னையே உற்று நோக்கி 
'இது உன் வீடும் அல்ல, என் வீடும் அல்ல 
அரசாங்கத்திற்கு சொந்தமானது....
இருவருமே வாழுவோம் 
சண்டை மறந்து சமாதானமாய்....'
என்று சொல்லி நீ சென்ற பிறகுதான் புரிந்தது
பொதுவுடைமை தத்துவம் என்னவென்று...  

27 comments:

  1. புறாவுடன் பொதுவுடைமையா? பலே..

    ReplyDelete
  2. புறாவின் மூலம் தத்துவம், உங்களுக்கு மட்டும் அல்ல, நம் எல்லோருக்கும்......

    ReplyDelete
  3. புரிந்து கொள்ளுவதை புறாவிலிருந்து ஆரம்பிப்போம், உஷா...

    ReplyDelete
  4. போதுவுகடமை பேசிய புறாவை வாழ்த்திவிட்டு, என் நிஜமான கவலையை பதிவு செய்ய ஆசை! ? காணாமல் போன சிட்டு குருவியை தேடியழைத்து இன்னோரு முற்றத்தை ஒதுக்கி வரவேற்ப்பு அளியுங்களேன், புண்ணீயமாய் போகும்! நாங்கள் இங்கே (சென்னையில்) கன கச்சிதமாக ஒழித்துவிட்டொமில்லே?

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் ஆசைதான்....எங்க கோயம்புத்தூரிலே இப்போ கட்டிடமா கட்டி சிட்டு குருவியை ஒழிக்க கங்கணம் கட்டி வேலை செய்றாங்க.....உங்க வேண்டுகோளை எங்க வீட்டிலேயாவது நிறைவேற்ற பார்க்கிறேன்....

      Delete
  5. வீடு கவர்மெண்ட் குவார்ட்டர்சா? கில்லி படத்துல வர்ற மாதிரி ”ஏங்க.. இந்த வீட்ட வித்துருவோமா? இது கவர்மெண்ட் குவார்ட்டர்ஸ்... ”பொதுவுடைமை தத்துவத்தை எளிமையா புரிய வச்சுட்டீங்க.

    ReplyDelete
    Replies
    1. சென்னையில கவர்மென்ட் குவார்டர்ஸ் தான்...கில்லி படம்தான் எனக்கும் ஞாபகத்தில் வந்தது....அதனால் புறாகூட பொது ஒப்பந்தம் செய்துகிட்டேன் விச்சு.....

      Delete
  6. அருமை ...அருமை ...

    ReplyDelete
  7. வாழ்க பொதுவுடமை...

    அழகிய கவிதை

    ReplyDelete
    Replies
    1. நன்றி சௌந்தர்...

      Delete
  8. வாழ்க புறா குடும்பத்துடன்!

    ReplyDelete
    Replies
    1. புறாவின் சார்பாக நன்றி....

      Delete
  9. புறாக்கள் அழகானவை. அவற்றுடன் பொதுவுடமை சமரச ஒப்பந்தம் செய்து கொண்டது எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. அடுக்கடுக்கா தீப்பெட்டி தீப்பெட்டியா நெருக்க நெருக்கமா இடைவெளியே இல்லாம பில்டிங்குகள் முளைச்சிட்டிருக்கற நகரத்தைப் பாத்து பெருமூச்சு விடற எனக்கு இந்தப் பதிவு ஆறுதல்!

    ReplyDelete
    Replies
    1. பறக்கும் இந்த உயிர்களை தினமும் பார்க்கவே சந்தோஷமாக உள்ளது....நன்றி கணேஷ்....

      Delete
  10. அழகான புரிதல். கவிதை சொல்லும் கருத்துக்குப் பாராட்டுகள் அகிலா.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கீதமஞ்சரி.....

      Delete
  11. பொதுவுடைமை தத்துவம் சொன்ன விதம் அழகு

    ReplyDelete
  12. அருமை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா உங்களின் வருகைக்கு....

      Delete
  13. மிக அருமை... புறா போன்ற பறவைகளுக்கு கிடைத்த சந்தோஷமான வாழ்கை மனிதனுக்கும் தந்தார் இறைவன்....பறவைகள் அதை அப்படியே வைத்துக்கொண்டு சந்தோஷமாக இருக்கிறது....மனிதன் அதை தானே கெடுத்துவிட்டு அழுதுகொண்டிருக்கிறான்....யார் தப்பு இது?

    ReplyDelete
    Replies
    1. அது மட்டும் அல்லாமல் அதை விதி என்றும் பெயர் சூட்டி மகிழ்கிறான்....என்ன செய்வது?

      Delete

உங்க கருத்தை சொல்லலாம்.....