Friday, 24 February 2012

மனமே.....

நிறுத்து.......



sketched by me


ஒன்றை நினைத்து ஏங்குவது
மற்றொன்றை நினைத்து மருகுவது 
அடுத்ததை நினைத்து அலைவது 
எத்தனை நினைப்புதான் உனக்கு 
நிறுத்து மனமே 
உன் லீலைகளை 
உன்னால் நான் படும்பாடு 
மாறாதே ஒரு எண்ணத்திலிருந்து 
மாற்றாதே என்னையும் 
நீ இல்லாமலே நான் பிறந்திருக்கலாமோ?




18 comments:

  1. Replies
    1. நன்றி சௌந்தர்......

      Delete
  2. தாவிச்செல்லும் மனதிற்கும்
    கடிவாளம் போட்டுவிடத் துடிக்கும்
    அழகுக் கவிதை..
    வரைபடம் மிக அழகு சகோதரி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி மகேந்திரன்.....

      Delete
  3. //எத்தனை நினைப்புதான் உனக்கு
    நிறுத்து மனமே
    உன் லீலைகளை //

    உண்மைதாங்க... மனது தன் லீலைகளை நிறுத்தினால் எந்த பிரச்சனையும் இல்லை...

    ReplyDelete
  4. நல்ல கவிதை.
    அருமையான ஓவியம். இன்னும் முயற்சி செய்யுங்கள்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கு நன்றி ஐயா....

      Delete
  5. அருமையா சொல்லிட்டிங்க போங்க!


    மிகவும் நன்றாக இருக்கிறது
    வாழ்த்துக்கள்

    ரத்த தானம் பெறுவதற்க்கும் கொடுப்பதற்கும் அணுகவும்
    www.shareblood.in


    இந்த தளத்தைப்பற்றியும் கட்டுரை எழுதலாமே!
    பலருக்கும் பேருதவியாக இருக்கும்
    www.shareblood.in

    ReplyDelete
    Replies
    1. நல்லவைகளை எழுதுவது மகிழ்ச்சியான ஒன்றுதான். செய்கிறேன் சூர்யா.....நன்றி...

      Delete
  6. மனம் ஒரு திமிரெடுத்த கிடா
    அது வளர்ந்த்தவன் மேல் பாய்வதிலேயே
    அதிக அக்கறை கொள்ளும்
    ஐம்புலனால் பாலூட்டி வளர்க்கப் பட்டாலும்
    ஐம்புலனையும் படுத்தி எடுப்பதில் அதற்கு ஈடு அதுதான்
    மனம் ஒரு போர்வாள்
    அதன் கூர்மைதான் அதன் சக்தி
    மொட்டைக் கத்தியால பயனில்லை
    கத்தியை கூர்மையாகவும் உறையிலிட்டும்
    தேவையான போது திறம்பட பயன்படுத்தத் தெரிந்தவன்
    புத்திசாலி.சிறந்த வீரன்
    தன்னையே தாக்கிவிடுமென கூர்மையின்றி வைத்திருப்பவன்
    கோழை.முட்டாள்
    சிந்தனையை கிளறிச் செல்லும் அருமையான பதிவு
    கவிதை சட்டெனத் துவங்கி சட்டென அடைமழை போல்
    முடிந்ததைப் போல் இருந்தது
    மனம் குறித்த தங்கள் பதிவு
    மனம் கவர்ந்தது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்களின் கருத்தே கவிதையாகிவிட்டது, கவிஞரே....

      Delete
  7. மனமில்லாத மனிதர்கள் ஏற்கனவே நிறைய இருக்கிறார்கள். உங்கள் கற்பனையும் நீங்கள் தீட்டிய ஓவியமும் நன்றாகவே உள்ளது.

    ReplyDelete
  8. மனம் ஒரு கரையில் நிற்பதில்லை என்பதை தெளிவாக சொல்லி இருக்கீங்க....!!!

    ReplyDelete
    Replies
    1. நிஜம்தானே நண்பரே....

      Delete

உங்க கருத்தை சொல்லலாம்.....