Sunday, 15 January 2012

பொங்கலோ பொங்கல்.....


பொங்கும் பானை...






கண்ணாடி வளையல் கிளுகிளுக்க 
கால் கொலுசு மெட்டியுடன் கிணுகிணுக்க 


காது ஜிம்மிக்கி பக்கமாட
கற்றை கூந்தல் பூவுடன் தலையாட்ட 

பருத்தி புடவை சரசரக்க 
பாதி பார்வை நாணத்துடன் கிறுகிறுக்க 

ஒற்றை பால் கிண்ணத்துடன் 
பொங்குவாள் பெண் 

இவை ஒன்றுமே இல்லாமல் 
எப்படி பொங்குகிறாய் நீ.....





9 comments:

  1. தித்திக்கும் அச்சுவெல்லமாய்
    திகட்டாத செங்கரும்பாய்
    பொங்கி வரும் புதுப் பொங்கலாய்
    மனதிலும் வாழ்விலும்
    மகிழ்ச்சி பொங்கி தங்கி இருக்க

    இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் சகோதரி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மகேந்திரன்....பொங்கல் வாழ்த்துக்கள்....

      Delete
  2. ந்ல்ல கற்பனை... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

    என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com

    ReplyDelete
    Replies
    1. பார்த்தேன் rishvan... அருமை...

      Delete
  3. இப்போ யாருங்க பருத்தி புடவை கட்டுறாங்க. கவிதை நல்ல அருமையான கற்பனை.

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி,...நான் பருத்தி புடவை கட்டுகிறேனே நண்பரே...

    ReplyDelete
  5. நல்ல கவிதை& மாறுப்பட்ட கருத்து.. பொங்கல் மாதிரி பெண்களை இப்படியெல்லாம் "பொங்கி"(கோபம்) எழ வைக்க உதவுபவர்கள் ஆண்களே.....

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே, உங்களின் வருகைக்கும் உண்மையை ஒத்து கொண்டதற்கும்....

      Delete
  6. நல்ல ஒப்பீடு அருமை ..

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....