Friday, 30 December 2011

மறக்கலாமா?

மறக்குமா ? மறக்கத்தான் முடியுமா?






மாடிப்படியில் குதித்து ஏறியபோது 
இடறிய பாவாடையும் 

ரயில் பிடித்து நடக்கும் போது 
கிழிந்த சட்டையும் 

கண்ணாமூச்சி ஆடும் போது 
ஒளிந்து கொண்ட மாட்டு கொட்டகையும் 

மாடி படிகட்டின் இடுக்கில் அமர்ந்து 
படித்த கதை புத்தகங்களும்   

ரயில்வே கேட்டில் உட்கார்ந்து கொண்டு 
எண்ணிய புகைவண்டியின் பெட்டிகளும் 

தூது எடுத்துபோன அக்காவின்
காதல் கடிதங்களும் 

சித்தியின் வளைகாப்பில்
அடுக்கிய கண்ணாடி வளையல்களும்

பெருமாள் கோயில் போவதாக சொல்லி 
ஊர் சுற்றிய பெருமாள்புரமும்

இறங்க பயந்து காலை மட்டுமே 
நனைத்த தாமிரபரணி ஆறும் 



மறப்பது சுலபமா?

இந்த மாய உலகில் மறந்தது போல் நடிப்பது சுலபமா ?





4 comments:

  1. நெஞ்சில் புதையுண்ட நினைவலைகளை
    அழகாக சொல்லியிருகீங்க சகோதரி.
    அதுவும் எங்க ஊருக்கு பக்கத்து ஊரு
    திருநெல்வேலி நினைவுகள் ... அருமை.

    ReplyDelete
  2. நேரம் கிடைக்கையில் என் தளம் வந்து பாருங்கள்.
    நன்றிகள் பல.

    http://ilavenirkaalam.blogspot.com/2011/12/blog-post_29.html

    ReplyDelete
  3. தங்கள் பதிவைப் படித்துக் கொண்டே வருகையில்
    என் மனமும் இதுபோல் மறக்க முடியாது நெஞ்சில்
    சிலையாய் படிந்து போன பழைய நினைவுகளில் மூழ்கித் தவித்தது
    வெளி மறுத்து அடம் பிடித்தது
    மனம் கவர்ந்த அருமையான பதிவு
    பகிர்வுக்கு நன்றி
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு
    நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. ஒவ்வொரு முறை ஊருக்கு சென்றுவிட்டு வரும் போதும் எனது மண்ணின் நினைவுகளை சுமந்து கொண்டுதான் வருகிறேன்.என் பதிவையையும் மதித்து வந்து கருத்து கூறியமைக்கு நன்றி, நண்பர்களே ....
    என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....