Tuesday, 15 November 2011

நம்ம ஊர் தபால் நிலையம்.....




Chennai HPO
                       


                        நமது ஊரில் இருக்கும் தபால் நிலையங்களை பார்த்து ஆச்சரியபடாமல் இருக்க முடியாது. சிறிய பகுதிகளை உள்ளடக்கிய தபால் நிலையங்கள் நமக்கு பக்கத்து வீடு மாதிரி. 

                       அவ்வளவாக கூட்டம் இருக்காது. உள்ளே போய் நம்ம பகுதியின் தபால்காரரை பார்த்து இப்போ லெட்டர் பாக்ஸ் வைத்துவிட்டோம், இனிமேல் அதிலேயே போட்டுவிடுங்கள் என்று சொல்லி விட்டு வரலாம். இந்தியா டுடே இல் இருந்து VPP பார்சல் வந்தால் வீடு வரைக்கும் தூக்கிட்டு வரவேண்டாம், இங்கிருந்தே திருப்பி அனுப்பி விடுங்கள் என்று தபால் பிரிப்பவரிடம் சொல்லலாம். போன் பில் கட்ட போனால், அங்கேயே புதிதாக கிடைக்கும் ஒரு தோழியிடம் ஊர் கதை உலக கதை எல்லாம் பேசி நீண்ட வரிசையில் காத்திருக்கும் நேரத்தை வீணாக்காமல் கழித்துவிட்டு அவர்கள் பையனை நம்மிடம் டியுஷனுக்கும் சேர்க்க வைத்துவிடலாம். 

                      மாதா மாதா கட்ட வேண்டிய  RD யை கட்டாமல் மூன்று, நான்கு மாதம் சேர்த்து கட்ட போனால் கண்டிப்பாக உள்ளே RD கட்டுகிற பிரிவில் இருப்பவர் கொஞ்சம் முகம் மாறுவர். ஏன்னா, பெரிய பெரிய அக்கௌன்ட் புத்தகத்தை எடுத்து அதில் ஒவ்வொரு மாதத்துக்கும் சீல் அடிக்க வேண்டும் (இப்போ எல்லா தபால் நிலையத்திலும் கம்ப்யூட்டர் வந்துவிட்டது) . அதனால் என்று நமக்கு கடைக்கு போக வேண்டுமோ அன்று தபால் நிலையத்தில் நம்ம RD புத்தகம், கட்டவேண்டிய பணம் எல்லாத்தையும் கொடுத்துவிட்டு டைம் கிடைக்கும் போது போட்டு வைச்சிருங்க...நான் ஒரு மணி நேரத்திலே வந்து வாங்கிக்கிறேன்னு சொல்லிட்டா  போதும். சமத்தா வேலையை முடிச்சிருவார். 

                        இதெல்லாம் city  இல் இருக்கும் தபால் நிலையத்தில் நடக்காது. நான் சென்னையில் இருந்த போது குரோம்பேட் சிட்லபாக்கம் தபால் நிலையத்தில் இதெல்லாம் சாத்தியபட்டிருக்கிறது. கோயம்புத்தூரில் காந்திபுரம் பேருந்து நிலையத்துக்குள் இருந்த தபால் நிலையம் எப்போதுமே கூட்டமாக இருக்கும். பேருந்து நிலையத்தை விட சத்தமாக இருக்கும். 




Kovaipudur PO



                    ஆனால் கோவைபுதூரில் உள்ள தபால் நிலையம் அமைதியாக இருக்கும். 'நீங்க எங்கே R  Block  இல் இருக்கீங்களா?'  என்று விசாரித்து கொள்ளலாம்....'இன்னைக்கு நாக பிள்ளையார் கோயிலில் விசேஷம்...சாயங்காலம் பார்க்கலாம்...' என்று தகவல் பரிமாறிக்   கொள்ளலாம். அங்கிருக்கும் நாற்காலியில்  உட்கார்ந்து, 'யாரு சொன்னது....நம்ம அம்மாவா...இல்ல உங்க அம்மாவா....' என்று அரசியல் கூட பேசலாம்.... 

நம் அரசாங்கத்தின் சொத்து நம் சொத்துதானே...அதுக்காக வித்துராதீங்க....பத்திரமா பாத்துக்குங்க.....  







3 comments:

  1. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

    http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

    ReplyDelete
  2. தபால் நிலையங்களைப் பத்தி ஒரு ஆராய்ச்சியே பண்ணியிருக்கீங்க போல... இன்னிக்கு தபால் எழுதற பழக்கமே குறைஞ்சுட்டு வருதுன்னும் ஒரு வரி சேர்த்திருக்கலாம் நீங்க. நன்றாக எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. மிக்க நன்றி....கடிதம் எழுதுவது குறித்து ஒரு தனி பதிவே எழுதலாம்ன்னு இருக்கேன்....உண்மையிலே ரொம்ப வருத்தமான விஷயம்தான் அது....

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....