Skip to main content

ஆரண்ய காண்டம்


ஆரண்ய காண்டம்



தியாகராஜன் குமாரராஜாவின் ‘ஆரண்ய காண்டம்’ நம் தமிழ் சினிமா உலகிற்கு ஒரு வித்தியாசமான கோணத்தை கொடுத்திருக்கிறது. அவருடைய முதல் படம் இதுதான் என்பது ஒரு ஆச்சரியம். பிற மொழிகளில் இருந்து சுட்ட கதை என்பது தெளிவாக தெரிந்தாலும் கதை கோர்ப்பு நன்றாக வந்திருக்கிறது.

Director Thiagarajan Kumararaja

 இந்த படத்தின் கதையை ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால், போதை மருந்து விற்கும் கும்பலை பற்றியது. அந்த கும்பலில் இருக்கும் கொஞ்சம் நல்ல மனம் படைத்தவர்கள், நிறைய கெட்ட குணம் உடையவர்கள், இந்த கும்பலை சேராத வாழ்ந்து நொடிந்து போன ஒரு தகப்பனும் மகனும், கும்பலின் தலைவனிடத்தில் மாட்டிக்கொண்டிருக்கும் ஒரு அபலை பெண், அவளால் மையலில் பிறகு துப்பாக்கியால் விழ்த்தபடும் ஒன்றும் அறியாதவனாய் காட்டப்படும் ஒரு வாலிபன் இவர்கள்தான் கதையை நிர்ணயிக்கிறவர்கள்.

இந்த கதை, அது நடைபெறுவதாக காட்டப்படும் களம், அதில் நடைபெறும் தூப்பாக்கி சண்டைகள், வன்முறைகள், ஆபாசமான வசனங்கள் அனைத்துமே நம் மண்ணிற்கு சொந்தமானது இல்லை. பலதரப்பட்ட வட்ட வட்டமான DVD-களில் இருந்து copy அடிக்கப்பட்டவை. Mexican Hat மட்டும்தான் missing....



பரவாயில்லை... படம் பண்ணியவர்களை மன்னிக்கலாம்....எதற்காக என்றால்,
  •        தமிழ் சினிமாவிற்கு இந்த களம் புதிது. துணிந்து இந்த கதையை படமாக்கியதற்கு SP Charan க்கு பாராட்டுகள்.
  •       தியாகராஜன் குமார ராஜாவை சும்மா சொல்ல கூடாது. நிறைய தைரியம் வேண்டும் நம் தமிழ் சினிமாவில் ஒரு ஆணை நிர்வாணமாக காண்பிப்பதற்கு.தமிழ் நடிகர்களை அப்படி காண்பிக்க முடியாத கட்டாயதால்தான் ஜாக்கி ஷேராப்பை இறக்குமதி செய்திருக்கிறார் போல. MGR தன்னுடன் நடிக்கும் கதாநாயகிகளை கேமராவுக்கு காட்டும் விதம் அனைவருக்கும் தெரிந்ததுதான்.  இப்படி நம் சினிமாவில் தொன்றுதொட்டு புழக்கத்தில் இருந்த பெண்ணை மட்டுமே அரை நிர்வாணமாக்கி காட்டும் Gender Bias இனியாவது சற்று ஒழியும் என்று நம்புவோம்.
  •        கிளைக்கதைகள் நிறைய இருந்தாலும் அதை கோர்த்திருக்கும் முறை அருமை.
  •  இதில் ஏகப்பட்ட பேர் நடித்திருந்தாலும் சம்பத் ராஜ், நொடிந்துபோன ஜமிந்தாராக வரும் சோமசுந்தரம், அவரது மகனாக நடித்திருக்கும் மாஸ்டர் வசந்த் ஆகியோருடன் மட்டுமே நம்மால் கதையோடு ஒன்றி போக முடிகிறது.
  •   சமுதாயத்திற்கு கேடு செய்பவர்களிடத்தும் நல்லதும் கெட்டதும் உண்டு என்றும் அதிலேயும் கெட்டவர்கள் தண்டிக்கபடுவார்கள் என்றும் சொல்லபட்டிருக்கிறது.


24 மணி நேரத்தில் சென்னையில் ஒரு போதைமருந்து விற்கும் கும்பலில் நடக்கும் கதையாக கண்பிக்கபட்டாலும் அதில் விறுவிறுப்புக்காக வன்முறையை அளவுக்கதிகமாக சேர்த்திருக்கிறார்கள். ஆபாச வசனங்களையும் சற்று குறைத்திருக்கலாம். மற்றபடி its a good attempt and as usual the debut film becomes a master piece.....







Comments

  1. உங்கள் எழுத்து நடை நன்றாக இருந்தது.கதை,கட்டுரை ஆர்வம் இருந்தால் கீழே உள்ள blog கு வரவேற்கிறேன்.


    http://suvaikkasuvaikka.blogspot.com/

    ReplyDelete
  2. மிக்க நன்றி...கண்டிப்பாக எழுதுகிறேன்....

    ReplyDelete
  3. ஆரண்யத்தில் (காட்டில் ) விதிகள் இல்லை
    தர்ம நியாயங்கள் இல்லை
    வலுத்தது வாழும்
    இளைத்தது வீழும்
    இதனைக் குறிக்கவே தலைப்பையே
    மிக அழகாக ஆரண்ய காண்டம் என வைத்திருந்ததும்
    ஜெயிப்பவர்கள் எல்லாம் நியாயஸ்தர்கள் இல்லை
    வலிமையும் புத்திசாலித்தனமுமே ஜெய்க்கும்படியாகக்
    கதையைக் கொண்டு சென்றதும் படத்தின் சிறப்பு
    மிக அருமையாக விமர்சனம் செய்துள்ளீர்கள்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. என் நண்பர்களின் வலியுறுத்தலின் பேரில் தான் இப்படத்தை பார்த்தேன்....அந்த கதையின் களம், அதன் எடுத்திருந்த விதம் எனக்கு பிடித்திருந்தது. அதனால் தான் விமரிசனம் எழுதினேன்....நன்றி ரமணி அவர்களே...

      Delete
  4. ungalin vimarsanam slum dog millionaire padam indiargalai ilivubaduthuvadharkaga edukka pattadhu endru thiru amidhab bachan kooriyadhu bol irukkiradhu...ungalin vimarsanam suvarasiyamaga irundhadhu....

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த தவ்வை, அறவி  என இரண்டு நாவல்கள், மி