லஞ்சம்
சில மாதங்களாகவே லஞ்சம் (corruption
) என்னும் பூதத்தை எதிர்த்து நம் நாட்டில் அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ் போன்றோர் உண்ணாவிரதம் இருப்பதும், போலீஸ் அவர்களை கைது செய்வதும், மீண்டும் உண்ணாவிரதத்தை தொடர்வதும், அரசியல்வாதிகள் lokpal bill யை (அதன் முழு சாராம்சமும் நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை; உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கே புரியுமா என்பது கேள்விக்குறி) நிறைவேற்ற போவதாக கூறிக்கொண்டே அதில் சுகமாக குளிர் காய்வதும் நாம் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம்.
இந்த லஞ்சம் என்பது கொடுப்பவர்களுக்கும் வாங்குபவர்களுக்கும் மட்டும் tension யை கொடுப்பதில்லை. கொடுக்க தெரியாதவர்களுக்கும் வாங்க தெரியாதவர்களுக்கும் கூட பிரச்னைதான். லஞ்சத்தால் நம் வரிப்பணம் கொள்ளை போகிறது. நம் நாட்டு பொருளாதாரம் சீர்குலைகிறது. Living Gandhi என்ற புதியதொரு பட்டத்தை பெற்றிருக்கும் அன்னா ஹசாரே சொல்வதும் சரிதான். இதற்கென்று பல சமூக வலைப்பின்னல் தளங்களில் Like button எல்லாம் வைத்து அதற்கு ஏக மரியாதை.
வன்முறை
இதில் என் கருத்தை நான் இங்கே பதிக்க விரும்புகிறேன். முதலில் லஞ்சம், விலைவாசி போன்றவற்றை எல்லாம் விட முக்கியமான ஓன்று நம் கண் முன்னே தினமும் நடைபெறுகிறது. அதுதான் வன்முறை.
குடிப்பவன், சீட்டாடுபவன், தாதாக்கள், கொலைகள் செய்யும் கூலிப்படைகள்...இதையெல்லாம் எதிர்த்து கேட்பதற்கு ஆள் இல்லை. ஒரு வாரத்திற்கு முன் கோவையில் டிராபிக் அதிகம் உள்ள சாலையில் குடி வெறியில் ஒரு கொலை நடந்திருக்கிறது. டாஸ்மாக்கை முடச் சொல்லி போராட ஒருவரும் இல்லை.
டெல்லி, பஞ்சாப், உத்திரபிரதேஷ் போன்ற மாநிலங்களில் நடக்கும் Honour Killings
பற்றி கவலைப்பட்டு யாருமே உண்ணாவிரதம் இருப்பதில்லை. பீகாரில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நடக்கும் அநியாயங்களை தட்டி கேட்க ஆளில்லை. மும்பையில் அவ்வவ்போது நடக்கும் குண்டு வெடிப்புகளை சரி செய்ய யாரும் முன்வருவதில்லை.
இவர்கள் யாருக்கும் வன்முறையை தட்டி கேட்கும் தைரியம் கிடையாது. வன்முறையாளர்களை எதிர்த்து யாரும் உண்ணாவிரதம் இருக்க முடியாது. அவர்கள் இருக்க விடமாட்டார்கள். இதுதான் நிஜம். நம் சமுதாயத்தில் இருந்து வன்முறை களையபடாமல், லஞ்சம் ஒழியாது. விலைவாசியும் இறங்காது.
வன்முறையாளர்களின் நினைப்பில் கத்தியும் துப்பாக்கியும் நர்த்தனம் ஆடிக் கொண்டிருக்கும் போது, கண்ணில் பார்க்க முடியாத லஞ்சமும் விலைவாசியுமா அவர்களை பாதிக்க போகிறது...
No comments:
Post a Comment
உங்க கருத்தை சொல்லலாம்.....