அப்பா
![]() |
| தந்தையைப் போல் மகன் |
அப்பாக்கள் எப்போதும்
ஒரே மாதிரிதான்
பிறந்த பொழுதில் கைகளிலும்
வளரும் பொழுதில் தோள்களிலும்
வளர்ந்த பொழுதில் நெஞ்சினுள்ளும்
சுமக்க கடமைப்பட்டவர்கள்
பார்வைகளை
மொழிகளாக்குபவர்கள்
மௌனங்களை
வார்த்தைகளாக்குபவர்கள்
புன்னகையை
சிரிப்பாக்க யோசிப்பவர்கள்
பெற்ற மகவை
பொறுப்பின் கனமாய் உணர்பவர்கள்
அவரை புரிந்துக் கொள்ள,
பெண் மகவுக்கு
அவகாசங்கள் வேண்டாம்
ஆண் பிள்ளைக்கோ
ஆண்டுகள் வேண்டும்
எல்லா அப்பாக்களும் ஒரே மாதிரிதான்,
கண்களில் நிதர்சனமும்
கனவுகளில் நிஜமுமாய்..
Happy Fathers Day



தந்தையர் தின சிறப்புக் கவிதை
ReplyDeleteமிக மிக அருமை
மிகக் குறிப்பாக...
அவரை புரிந்துக் கொள்ள,
பெண் மகவுக்கு
அவகாசங்கள் வேண்டாம்
ஆண் பிள்ளைக்கோ
ஆண்டுகள் வேண்டும்
மிக்க நன்றி அய்யா
Deleteமிகவும் அருமையான ஆக்கம். பாராட்டுகள்.
ReplyDeleteஇனிய தந்தையர் தின நல்வாழ்த்துகள்.
//அவரை புரிந்துக் கொள்ள,பெண் மகவுக்கு அவகாசங்கள் வேண்டாம் // :)))))
பகிர்வுக்கு நன்றிகள்>
பாராட்டுக்கு நன்றி
Delete// மௌனங்களை
ReplyDeleteவார்த்தைகளாக்குபவர்கள் //
இதை அறிந்து தெரிந்து புரிந்து கொண்ட தெய்வம்...
உண்மைதான் தனபாலன் ..நன்றி
Deleteபடத்தைப் பார்த்துப்
ReplyDeleteபடைக்கப்பட்ட
உள்ளக் குமுறல்கள்
அப்பா நன்றாக வந்திருக்கிறார் உங்கள் வரிகளில்.
ReplyDelete-ஏகாந்தன்