அடுத்தவர்களின் வட்டத்திற்குள்.....






பால்கனியின் கம்பியில்
வெள்ளை புறா
தன் முகத்தின் முன்னே
மேலிருந்து கீழாக
வலை பின்னும் சிலந்தியை
உற்றுப் பார்த்தபடி....

சிலந்தியோ புறாவின் தலையை சுற்றி
வலை பின்னத் தொடங்க
புறாவும் தலையை அங்கும் இங்குமாக
நகர்த்தியும் திருப்பியும்
சிலந்தியை ஒதுக்க....
சிலந்தி பிடிவாதமாய்
வலையை சுற்ற
சடக்கென்ற புறாவின் கொத்தலில்
காணாமல் போனது சிலந்தி.......

இதை காணும் போது
முந்தைய நாளின் சம்பவம் ஒன்று
நினைவில் நிழலாடியது

பக்கத்து வீட்டு குழந்தையும்
அவர்களின் டாபர்மெனும்....

குழந்தை கையில் எடுக்கும் அனைத்தும்
நாய் பிடுங்குவதும் எறிவதுமாக
அருமையாக விளையாடிக் கொண்டிருந்தார்கள்....

குழந்தையின் அம்மா சாப்பிட வைத்துச்சென்ற
பிஸ்கட்டை குழந்தை கையில் எடுக்க
அதையும் செல்ல பிராணி பிடுங்க...

எடுப்பதும் பிடுங்குவதும் தொடர  
நாயின் இந்த செயலுக்கு
குழந்தையின் சிரித்த முகம்
சிவந்த முகமாக மாற தொடங்கி
கையில் கிடைத்த பொம்மையை
குழந்தை நாயின் மேல் வீச
அது அப்படியே பின்பக்கமாக
நடந்து ஒதுங்க.....

குழந்தையின் சிரிப்பை மீறிய
ஒரு சிறிய கோபம்
தன் சுயத்திற்கானது...

புறாவின் பொறுமை மீறிய
ஒரு சிறிய கோபம் கூட  
அதன் சுயதிற்குதான்....
இரண்டுமே ஒன்றுதான்...
இரண்டுமே நியாயம்தான்....

அடுத்தவர்களின் வட்டத்திற்குள்
அடியெடுத்து வைக்காதவரை
எல்லாமே அழகுதான்...




  

Comments

  1. பீர்பால்,முல்லா கதைகளில் மட்டுமே நாம் moral story யாக படித்து இருக்கிறோம் ,ஆனால் அவற்றின் காலம் நாம் கண்டிராதவை ,ஆனால் கண்ணில் கண்ட ஒரு காட்சியை அருமையாகmoral story யாக ஆக்கிய விதம் அருமை ...

    ReplyDelete
  2. அழகாக சொன்னீர்கள் அகிலா...
    நம்முடைய எந்த ஒரு செயலும் பிறரது எல்லையை மீறாததாக இருக்கவேண்டும்... அப்படிப்பட்ட ஒரு செயல் தான் நம்முடைய பாதுக்காப்பும் கூட சுயநலம் என்ற பெயரை நமக்கு வாங்கி தந்து விடுகிறது... இயற்கையான செயலை வைத்து மிக அற்புதமாக சொல்லிவிட்டீர்கள்.. உங்களுக்கு என் பாராட்டுக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நிஜம் தான் தேவாதி ராஜன்....

      Delete
  3. இரண்டுமே ஒன்றுதான்...
    இரண்டுமே நியாயம்தான்....

    அடுத்தவர்களின் வட்டத்திற்குள்
    அடியெடுத்து வைக்காதவரை
    எல்லாமே அழகுதான்...

    அழகான வரிகள்..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி இராஜேஸ்வரி.....

      Delete
  4. நம்மை சீண்டாதவரை நாம் பொறுமையின் எல்லைதான் சீண்டிவிட்டால் அதுவே நமக்கு அவப்பெயர் ஏற்படுத்திவிடும்.அடுத்தவர்கள் வட்டத்திற்குள் அடியெடுத்து வைக்காதலரை எல்லாம் அழகுதான்.
    அழகான வரிகள் வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular Posts