என்கிற ஒரு அரக்கத்தனம்......
நேற்று இரவு நம் மாபெரும் சென்னை பட்டினத்தில் வங்கி கொள்ளையில் சம்மந்தப்பட்டதாக சொல்லப்பட்ட வடமாநிலத்தை சேர்ந்த ஐந்து பேரை நமது காவல்துறை என்கவுண்டர் என்ற பெயரில் போட்டு தள்ளியிருக்கிறது. இது உண்மையா பொய்யா என்கிற சந்தேகங்கள் முளைக்கத்தான் செய்கிறது.
பெருங்குடியில் நடந்த வங்கி கொள்ளைக்கு பிறகு தீவிர தேடுதல் வேட்டை நடத்தியதாகவும் ஒருவனை வைத்து மற்றவர்களை பிடித்ததாகவும் காவல்துறை சார்பு வாதம். உண்மை என்றே வைத்து கொள்வோம். யாருக்கும் ஒரு சிறு காயம் கூட கொடுக்காமல் (நம் ஜனங்கள் எப்படி...அவனுங்க பொம்மை துப்பாக்கியை காண்பித்தால் கூட தானே பக்கத்து அறையில் போய் ஒளிஞ்சிக்குவாங்க ) வங்கியை கொள்ளை அடித்து சென்றிருக்கிறார்கள். அவர்களின் செயல் தவறுதான். ஒரு தடவை செய்தது போல் மறுமுறையும் வேறொரு வங்கியில் செய்திருக்கிறார்கள்.
பழைய பாடலில் வருவது போல் 'திருடனா பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது' என்கிற பாலிசி சரிபடாதுதான். காவல் துறை என்பது சட்டத்தை பாதுகாக்கதான் என்பதையும் ஒத்துகொள்கிறோம்.
ஆனால் இவர்களை கொன்று குவித்தால்தான் மற்ற கொள்ளையர்களுக்கு பயம் வரும் என்பதும் வடமாநிலங்களில் இருந்து வேலை தேடி நம் சிங்கார சென்னைக்கு வரும் இளைஞர்கள் இந்த மாதிரி திருட்டு, கொள்ளைகளில் ஈடுபடமாட்டார்கள் என்பதும் ஒரு தடவை போட்டு தள்ளிவிட்டால் இன்னும் இரண்டு வருடங்களுக்காவது நம்ம சிட்டி அமைதியா இருக்கும் என்று சொல்வதும் காவல்துறைக்கு சரிதான்.
இந்த இளைஞர்களின் உயிரை பறித்துதான் இதை செய்யவேண்டும் என்றில்லை. அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுங்கள். அவர்கள் ஒன்றும் கற்பழிப்போ, கொலையோ செய்யவில்லையே. இதற்கெல்லாம் அரபு நாடுகளில் கொடுக்கும் தண்டனையை நாமும் பின்பற்றவேண்டும் என்ற கட்டாயமும் இல்லை.
இது காந்தி பிறந்த மண். ஆனால் நாம் காந்தியையும் அவரது அகிம்சையையும் மறந்து மாமங்கம் ஆகிறது.
உங்களுடன் முற்றிலுமாக மாறுபடுகிறேன்... ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைகாட்டும் காலத்திலா இருக்கிறோம்? அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுங்கள் என்று சொல்லி இருக்கிறீர்களே ....நீங்களே சொல்லுங்கள் கடுமையான தண்டனை என்றால் என்ன? சட்டப்படி ஒரு மண்ணும் செய்ய முடியாது என்பது மிக நன்றாக தெரிந்திருக்கும் நீங்கள் இப்படி சொல்வது தான் சற்று வியப்பாக இருக்கிறது.....உள்ளே போட்டு கேஸ் நடத்த ஆரம்பிக்கும்போதே ஒரு பெரிய தொகையை ஜாமீனாக கொடுத்தால் பெரிய வக்கீல் வெளியில் கொண்டு வந்து விடுவார்.....அவரின் பீசுக்கும் சேர்த்து வைத்து மீண்டும் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடுவதைத்தவிர இவர்களுக்கு என்ன தெரியும்? சினிமாவில் வருவது போல இவர்களில் மனம் திருந்தி ஜெயிலில் உழைத்ததற்காக குடுக்கும் சம்பளத்தில் ஒரு தொழில் ஆரம்பித்து உழைப்பார்களா? ஜெயிலுக்கு உள்ளே போகும் முன்பை விட உள்ளே இருக்கும் போது தான் அதிகமாக கெடுகிறார்கள்.... திருந்துவதை விட மேலும் அதிகமாக கெட்டுப்போக ஒரு பயிற்சி பட்டறையாக தான் சிறை செயல் படுகிறது.....வெளியில் இருக்கும் போது போதைக்காக தண்ணி அடித்தவன் உள்ளே வசதிக்குறைவின் காரணமாக கஞ்சாவுக்கு மாறுகிறான்....அது தான் எளிதில் கிடைப்பது எளிதில் உபயோகப்படுவது.... ஹோமோசெக்ஸ், ரவுடித்தனத்தின் பயிற்று இடமாக சிறை உள்ளது...வெளியில் வந்தவன் மறுபடியும் அதை தவிர வேறு என்ன செய்ய முடியும் என்று எதிர்பார்கிறீர்கள்? போட்டு தள்ளியது தான் மிக சரி.....
ReplyDeletemigavum sariyaga sonnergal!!
Deletevelaiya parungada,, encounter romba avasiyam, ponathu nammoda money.., avan iruntha innum irukra bank la kollai thaan adipan, un panam poiruntha unaku theriyum, inga vanthu pesuran manitha neyathai pathi,,, think da think
Deleteகுரு, அனைவருமே இளைஞர்கள்....சிறைசாலை என்பது நீங்கள் கூறியது போல் இருந்தாலும் மரணம் என்பது சிறைவாசத்தை விட கொடியது...திரும்பி வரமுடியாதது என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கும்....கொடூரமான கொலைகளை செய்தவன் கூட சிறையில் இருக்கும்போது இவர்களும் ஒரு ஓரமாக இருந்துவிட்டு போகட்டுமே...தவறு செய்யும் எல்லோரையும் போட்டு தள்ளவேண்டும் என்கிற இந்த சமூக கோபம் மாறவேண்டும் குரு....கொடியவனை சுட்டால் சரி, வங்கியில் கொள்ளை அடித்தவனை எல்லாம் அதுவும் ஒருவர், இருவர் அல்ல...ஐவர் சுட்டால்....யோசித்து பாருங்கள்....உத்தரவு மேலிடத்திலிருந்து வருகிறது என்றால் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற காவல்துறையின் போக்கு மாறவேண்டும் என்பதுதான் என் ஆசை.....
Deletenalla sonninga..ithu thevai illa murder..
DeleteGood post
ReplyDeleteநன்றி யுவகிருஷ்ணா...
Deleteஅன்புச் சகோதரி..
ReplyDeleteதங்களின் கருணை உள்ளத்திற்கு முதல் நன்றி.
சிறு பொருளை திருடுவதற்காக அதனை சிரமப்பட்டு
சேர்த்து வைத்தவரை அநியாயமாக கழுத்தறுத்து கொன்று
திருடிச் செல்பவரை கொன்றால் ஒன்றும் குற்றமில்லை என்பதே
என் கருத்து..
சென்ற மாதம் நான் தெருவில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன்.
அப்போது அவ்வழி வந்த ஒரு அம்மனியாரின் கழுத்துச் சங்கிலியை அவ்வழி சென்ற
மிதிவண்டி பயணி ஒருவர் இழுக்கிறேன் என்று இழுத்து அவரின் கழுத்து மிகுந்த புன்பட்டதுதான்
மிச்சம். சங்கிலி வரவில்லை..
சுற்றி இருந்த எல்லோரும் அந்த நபரைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தோம்..
காவல்துறையினர் சரியான நபர்களை தண்டித்தார்களா என்பது மறுபுறம் இருக்கட்டும்.
ஆனால் இப்படிப் பட்டவர்கள் இம்மாதிரி முறையில் தண்டித்தல் தான் சரி..
சமுதாயத்தில் அனைவருமே இப்படி யோசிக்க ஆரம்பித்தால் என்னாவது, மகேந்திரன்.....மனித நேயம் என்பதைத்தான் நான் முதன்மையாக வைக்கிறேன் இங்கு....
Deleteஎன்கவுன்டர்கள் மரணங்கள் சட்டப்படி சரியல்ல! இருந்தபோதிலும் பெரும்பாலான என்கவுன்டர்களுக்கு பெரும்பான்மையான மக்களின் ஆதரவு தொடர்ந்து வருகிறது! ஒருவேளை தர்மப்படி சரியென்று மக்கள் நினைக்கின்றனரோ!
ReplyDeleteசட்டத்தின் ஆட்சிதான் நடக்கின்றது!
சமுதாயத்தின் மீது, அரசாங்கத்தின் மீது மக்களுக்கு இருக்கும் கோபம்தான் என்கவுண்டர்களை ஆதரிக்க வைக்கிறது.....
Deleteappadiya shoot pannitagala oh super police
ReplyDeleteappadiya shoot pannitagala oh super police
ReplyDeleteஅனைவரும் கஷ்டபட்டுத வங்கில சேமிப்பு பண்ணுறாங்க அதை திருடுவது தப்பு இல்லையா அம்மா ???..இப்படி தவறு செய்வது செய்பவர்களுக்கு இது சரியான தண்டனை.....காரணம் நம் தேசத்தில் திருட்டு,பெண் கொடுமை,பள்ளி சிறுவர்கள் கடத்தல், இப்படி பல பல தவறுகள் தான் தினமும் நடக்கிறது...மாணவன் சரியாக படிக்கவில்லை,மாணவனை அடித்தால் அதை தட்டி கேட்க 1008 சங்கங்கள் உண்டு....ஆனால் கொலையுண்ட ஆசிரியைகாக ஒரு சங்கமாவது குரல் கொடுத்தா ???மற்ற ஆசிரியர்கள் தைரியமாக எப்படித்தான் இனி கற்பிக்க முடியும்??? தண்டனைகள் மிக மிக கடுமையானால் மட்டுமே தவறுகள் குறையும்....அம்மா
ReplyDeleteதிருடனுக்கு திருந்த ஒரு சந்தர்ப்பம் கொடுக்கலாம். ஆனால் கொலை செய்பவனுக்கு கொடுக்க தேவையில்லை என்பது என் கருத்து, விஜய்.....
Deleteஒருவரைத் தன்னும் உயிருடன் பிடிக்கமுடியவில்லை என்பது நம்பும்படியில்லை.
ReplyDeleteஇவர்கள் தவறிழைத்கிருப்பின் இத் தவறுக்கு இதுவல்ல தண்டனை! அப்படியெனில்
நம்ம அரசியல்வாதிகள்- அம்மா உட்பட அடிக்காத கொள்ளையா? அவர்களுக்கு இதே தண்டனை
கொடுத்தால் , எத்தனை அரசியல்வாதிகள் மிஞ்சுவார்கள்.
பொலிஸ் என்ன? ரொம்ப யோக்கியமானவங்களா? நடுரோட்டில் பிச்சை(லஞ்சம்) வாங்குபவர்கள் தானே!
நம் சமுதாயத்தின் கட்டமைப்பில் அரசியல்வாதிகள் மட்டுமே தப்பிக்கிறார்கள்....என்ன செய்வது?
Deleteதவறு செய்திருக்கும் பட்சத்தில் இது சரியே. எத்தனை பேர் தவறு செய்துவிட்டு திருந்தியுள்ளனர்? விரல்விட்டு எண்ணிவிடலாம். இன்று கொள்ளை அடிப்பவன் நிச்சயம் கொலை செய்ய தயங்கவே மாட்டான்.சிறை சென்ற மறுநாளே ஜாமீனில் வந்து இதே தவறைத்தான் செய்வான்.இன்று தமிழகத்தில் கொலை கொள்ளை அதிகரித்துள்ளது. காரணம் தண்டனையின் வீரியம் குறைவு. தவறு செய்துவிட்டு தப்பிவிடலாம் என்ற எண்ணம்.
ReplyDeleteஉங்களின் கருத்து ஒரு கோணத்தில் சரியெனப்பட்டாலும் அவர்கள் இளைஞர்களாக இருப்பதால் கிடைத்த தண்டனை பெரிதோ என்று தோன்றுகிறது, விச்சு.....
Deleteஉங்களின் கருணை உள்ளமும் புரிகிறது.
Deleteஎனக்கு என்னவோ அவர்கள் உண்மையான
ReplyDeleteகுற்றவளிகள் என்பதை சரியாக அறிந்திருந்தால்
செய்தது சரியெனப்படுகிறது
இப்படித்தானொரு தீவீரவாதி சுடுவதை வீடியோ
படத்தோடு பார்த்தும் கூட அதை நிரூபிக்க
கோடிக்கணக்கில் செலவு செய்து கொண்டிருக்கிறோம்
இறை அச்சம் அடியோடு போய்விட்டது
தர்ம நியாயங்களும் எடுபடவில்லை
உயிர் பயமாவது சமூகத்தில் தீயவர்களின்
பயமற்ற நடமாட்டத்தைக் குறைக்கிறதா பார்ப்போம்
அப்படி நினைத்துதான் அவர்களும் செய்திருக்கிறார்கள்..ஆனாலும் என் மனம் ஒப்பவில்லை இச்செயலை.......
Deleteகொள்ளை அடித்தவர்கள் அவர்கள்தான் என்றால் என் கவுண்டர் சரிதான் என்பது எனது கருத்து இந்த அளவு துணிஞ்சவர்கள் எதிர்காலத்தில் ஜெயிலுக்கு போய்வந்து இன்னும் ஒரு படி அதிகம்தான் செய்வார்கள். நீங்கள் பெண் என்பதால் உங்களின் மனம் இர்ங்குகிறது.
ReplyDeleteஅவர்கள் யாருமே திருந்தவே மாட்டார்கள் என்பதை நீங்களாகவே முடிவு செய்து கொள்கிறீர்கள்...நீங்கள் சொல்வது போல் பெண் என்பதால் இரங்குகிறேனோ? தெரியவில்லை.....நன்றி....
DeleteHello Lady,
ReplyDeleteEncounter is the correct action taken by the police. When you loose something ,you will also think encounter is correct.
அகிலா மேடம் நீங்கள் கொஞ்சம் ப்ராக்டிக்லாக யோசித்து பார்த்தால் புரிந்து கொள்வீர்கள்.. இவர்கள் ஜெயிலுக்கு போவதால் திருந்த போவதில்ல்லை. ஜெயிலில் நடக்க்கு அட்டுழியங்கள் வெளியே நடப்பைவைகளை விட மோசமானவை. ஜெயிலுக்கு போவது பல்கலைகழகங்களுக்கு போவது மாதிரி அல்ல அங்கே போய் டிகரி வாங்கி வெளீயே வந்து நல்ல வேலை பார்த்து வாழ முடியாது. இவர்கள் செய்த தவறு எமோஷனலாக செய்த தவரூ அல்ல எமோஷனலாக செய்த தவறுகள் காலபோக்கில் சிந்தித்து மாற்ற கூடியவை என்பது எனது கருத்து. இங்கே நான் சொல்லவது எனது கருத்து மட்டுமே தவறாக நீங்கள் நினைத்தால் மன்னிக்கவும்.
ReplyDeleteஉங்களுக்கு இளகிய மனது இருப்பதாலும் உயிரின் விலை மதிப்பு மிக்க தாலும் நீங்கள் இதை தவறாக கருதிகிறிர்கள் போலும்
உங்களின் கருத்தை நான் மதிக்கிறேன்.....
Deleteநான் ஒரு விஷயத்தில் மட்டுமே உங்களிடம் இருந்து வேறுபடுகிறேன். அவர்கள் கொலை செய்திருந்தால் இந்த என்கவுன்ட்டர் சரியென ஒத்துக்கொள்வேன். ஆனால் திருடுதல் என்பதற்காகவும் இனிமேல் கொலை,கற்பழிப்பு போன்றவற்றையும் செய்வார்கள் என்கிற அனுமானத்தின் பெயரிலும் செய்யப்படும் என்கவுண்டேர்களை எப்படி மனசாட்சியோடு ஒத்துக்கொள்வது?
அகிலா மேடத்தின் அன்பான தாய் உள்ளர்திற்கு வணக்கங்கள் உண்மையில் அவர்கள் திருடியிருந்தால் அவர்களுக்கு தண்டனை சரிதான் ஆனால் கண்டன
ReplyDeleteகுரல் எழுப்புகிற அறியாத உள்ளங்கள் ஏன் 17 லட்சம் கொள்ளை செய்த இவர்களை மட்டும் போட்டு தள்ளியது,200000000000 கோடி உஊழல் செய்த அண்ணன் ராஜா வுக்கு ஏன் சுக வாசம்,இரக்கமே இல்லாம கொலை செய்த கசப்புக்கு ஏன் சுகவாசம், எங்க ஊர்ல ஒரு மந்திரி கோடி கணகில கொள்ளை அடிச்சான் அவனை ஏன் போட்டு தள்ளல சிந்தியுங்க நாட்டுல நிறைய பேர் தான் நல்ல வன்னு காண்பிக்க நடத்தும் நாடகம்,உண்மையில் தவறு எங்கே இருந்தாலும் தண்டிக்க படனும் அனா அவர்களை பெறற தாயுள்ளங்களை நினைக்கும் போது நான் ஒரு மனிதனாக என்னை நினைத்து கொள்கிறேன்
உண்மைதான் ராஜன்...மனிதத்துவம் சாகவில்லை என்று உறுதிப்படுத்தி இருக்கிறீர்கள்....
Deleteஉங்களை பல்சுவை பதிவர்கள் என வலைசரத்தில் பெருமைப்படுத்தியுள்ளேன்
ReplyDeleteபல்சுவை பதிவர்கள்
என்னை பெருமைபடுத்தியதற்கு நன்றி....
Delete/ இது காந்தி பிறந்த மண். ஆனால் நாம் காந்தியையும் அவரது அகிம்சையையும் மறந்து மாமங்கம் ஆகிறது.
ReplyDelete//
இபோதெல்லாம் அகிம்சையாக இருப்பவர்க்கு இம்சைதான்
இன்றய அதிர்ச்சி ...
ReplyDeleteவிஜய் - என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாக துப்பாக்கியில் ..
நல்லாத்தான் இருக்கு....
Deleteகளை எடுக்கும் போது (பாதிக்கப்பட்டதாக நினைத்தால்) பாதிக்கப்படும் ஒன்றிரண்டு பயிர்களுக்கு சேதம் என்பது தவிர்க்கமுடியாது. மேலும் களைகளை நட்டு வைத்து போற்றி பாதுகாக்க இடமில்லை.
ReplyDeleteநன்றி உங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.....
Delete