Monday, 10 March 2014

காதலின் சுவற்றில்...





எழுதப்படாதவற்றை 
மிச்சமின்றி எழுத,

நீ
வான் நிலவை
இறக்கி வந்தாய்,
பேரரளி எடுத்து
சூட்டினாய்,
அந்தியில் உறங்கச் செல்லும்
வெண்மேகமதை
இழுத்துவந்து
தலையணை செய்தாய்...

முடிவின் பிடியில்,
எங்கோ வழிந்தோடும் தடத்தில்
வெற்றுடலாய் நின்றோம்,
யாருமறியா நிசப்தம்
தூக்கி நடந்தோம்,
தூரத்தின் வெளிச்சம் பட்டு
உயிர் மீண்டு வந்தோம்,
இன்னும்
எழுதப்படாதவற்றை
மிச்சமின்றி எழுத...


6 comments:

  1. சில்லிட வைக்கும் படத்தையும் (ஏக்கத்துடன்) ரசித்தேன்...!

    ReplyDelete
  2. ரசிக்க வைத்த கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி குமார்...

      Delete
  3. படமும் கவிதையும் அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுரேஷ்...

      Delete

உங்க கருத்தை சொல்லலாம்.....