Monday, 3 March 2014

உன் வாசத்தை மட்டும்...





நீரின் அசைப்பிற்கு 
தழைந்து பின் நிமிரும் 
நாணலின் நிமிடங்கள், 
நினைவுபடுத்திச் செல்லும், 
என் விரல் கொண்டு 
உன் நாசி தொட்டு
இதழ் பிரிக்கும் பொழுதுகளை... 

வேரிழுக்கும் சுழலாய் 
நினைவுகள்,
மனதை 
வட்டம் கட்டி 
பரிணமித்திருக்க, 

கரை மோதி நுரைத்து திரும்பும் 
ஆற்றின் தேடல், 
ஆதர்சன வெண்மையாய் 
வானெழும்பி பறக்கும் 
உன் வாசத்தை மட்டும் 
உதறிவிட்டு...


4 comments:

உங்க கருத்தை சொல்லலாம்.....