Thursday, 17 October 2013

உன் வருகைக்காக...

All I ever did was Love U


உன் வருகைக்காக 
காத்திருத்தல் வாடிக்கையாகிப் போனது எனக்கு
நீ வரப் போவதில்லை எனத் தெரிந்தும்
இனி வரவேப் போவதில்லை எனத் தெரிந்தும்...

நீ  ரசிக்கவே இடப்பட்ட 
நகச் சாயத்தின் வண்ணம் குறைந்து 
உலர்ந்து உரிந்துப் போனது 

உன் கைவிரல்களின் ஸ்பரிசம் பட 
எடுத்துவைத்த சேலையின் மீது 
என் கைப்பட்டு கசங்கிப் போனது 

ஏங்கிய உதடுகளின் 
ரேகைகள் கூட நீரின்றி  
விரிசல்களாகிப் போனது 

கண்களின் நீர் வற்றிப்போய் 
இமைகள் மூட முடியாமல் 
இரவின் போதும் விழித்திருக்கத் தொடங்கின  

உள்ளத்தின் மீதுதான் காதலென்ற 
உன் சொற்கள் பொய்யாய்ப் போன பொழுதில் 
என்னைத் தொட்டுச் செல்லும் 
அனுமதியற்றுப் போனாய் 

எத்தனையோ இரவுகளின் நிழல்கள் 
கழிந்திருக்கின்றன உன்னின் நிஜங்களின்றி
இருந்தும், 
வாசலின் விளிம்பில் காத்திருந்திருக்கிறேன்...
 
வேற்று முகங்களை நம்பும் உன்னால் 
உன் கண்ணாடியாய் இருக்கும் முகத்தை  
உணரமுடியாமல் போனது வேடிக்கை...

என்னுள் காயங்களை மட்டுமே 
திரும்பத் திரும்ப விதைத்துச் செல்கிறது 
புரிதலில்லா பக்குவமற்ற உன் காதல்...   

இனி என்றும் கனவில் மட்டுமே நீ என்பதே  
வலிகொண்டு எழுதப்பட்ட வாசகங்களாய்  
என் இதயச் சுவற்றின் கீறல்களாய் 
செதுக்கப்பட்டுப் போனது...


11 comments:

  1. எதிர்ப்பார்ப்பின் வலிகள் உணர முடிகிறது...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன்...

      Delete
  2. நுண் உணர்வுகளை நன்றாக வெளிப்படுத்தும் கவிதை அழகு.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஸ்ரவாணி...

      Delete
  3. //வேற்று முகங்களை நம்பும் உன்னால்
    உன் கண்ணாடியாய் இருக்கும் முகத்தை
    உணரமுடியாமல் போனது வேடிக்கை...//

    மன வலிகளைச்சொல்லும் மிக அருமையான கவிதை. பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அய்யா...

      Delete
  4. ஏங்கிய உதடுகளின்
    ரேகைகள் கூட நீரின்றி
    விரிசல்களாகிப் போனது

    ------------

    வலிகள் நிறைந்த வரிகள்.
    அருமை சகோதரி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி குமார்...

      Delete
  5. ஏக்கம்.. உணர்ச்சி..பிரிவு..ஆற்றாமை..
    அத்தனையும் உணர்வுகளின் கொப்பளிப்புகளாய்
    அழகான உருவாக்கம் சகோதரி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி மகேந்திரன்...

      Delete
  6. உணர்வுகளின் பிரதிபலிப்பு அருமை ..பருக பருக கள்கூட புளிக்கும் என்பர் ஆனால் உங்கள் கவிதை படிக்க படிக்க உணர்வுகள் இனிக்கிறது உணர்வுகள் உரோவியமாய் ..தீட்டி உள்ளீர்கள் .. சூப்பர்

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....