Friday, 30 August 2013

நீயில்லா...


உன்னை நோக்கியே வருகிறேன் என்று
தீண்ட வந்து தாண்டிச் செல்லும் நாகம்
சாவை எதிர்நோக்கச் செய்யும் அந்த நொடியைத்தான்
கொடுத்துச் செல்கிறாய் என்னைத் தாண்டும்  
ஒவ்வொரு முறையும் நீ...


நாகத்தின் தீண்டலிலிருந்து வேறுபட்டு
அந்த நொடியின் முன்னும் பின்னும்
இன்பமும் துன்பமுமாய் மாறிப் போகிறது
அவ்வளவே...

யாதென்ற திசையறியா அலையும் எண்ணங்கள்
அடைக்கலமாய் புகுமே இதயத்தின் மடிப்புகளில்
சஞ்சரிக்கும் திறனை இழந்து....

ஏமாற்றங்களின் எல்லையை
என்றோ தாண்டிவிட்டதாய் நினைத்திருந்தேன்  
எதிர்பார்ப்பின் எல்லைகளைக் குறுக்கிக் கொண்டு...

வற்றிவிட்ட கண்ணீரின் வழித்தடங்கள்
எங்கோ வலியாய் இறுக்கம் கொள்ள
நீயில்லா இந்த இரவின் நிழலாய்
நான்....



2 comments:

  1. தீ..தீ ,,தித்திக்கும் தீ தீண்ட தீண்ட இனிக்கும் ..காதல் கொண்ட நெஞ்சின் ஏமாற்றதின் வெளிபாடு விரக்தியின் விசும்பல்கள்

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....