Saturday, 13 July 2013

துரத்திவிடப்பட்ட இருட்டின் அடிச்சுவடு...



துரத்திவிடப்பட்ட இருட்டின் அடிச்சுவடு
உரசிச் செல்லும் அதன் வெளிச்சத்தை..
அவை காமத்தின் ஒரு கண்ணை மட்டுமே 
கட்டும் திறனுடையவைகளாகிப் போகும்... 

உயிர் திணிக்கப்பட்ட எதையும் இழுத்துச் சென்று
விளக்கின்றி நிழல் சுமக்கும் படுக்கையின் மீது 
போட்டுச் செல்லும்... 
அவற்றின் அழுகுரல் 
எங்கோ தூரத்து இடியின் இரைச்சலை ஒத்திருக்கும்...

விட்டு விலகும் சமயம்
எதற்கோ நீளும் அதன் கைகளின் முடிவில் 
அவைகளுக்கான வெளிச்சத்தின் உயிர் முளைத்திருக்கும்... 

8 comments:


  1. வணக்கம்!

    மறைவாய் உணா்த்தும் மலா்தமிழ் என்னுள்
    நிறைவாய் உணா்த்தும் நிலைத்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு


    ReplyDelete
    Replies
    1. நன்றி கவிஞரே...

      Delete
  2. அருமை...
    அழகான கவிதை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி குமார்...

      Delete
  3. புதினமாய் வடிவு கொண்ட கவிதைகள் புதிர்களின் முடிச்சு ..

    ReplyDelete
  4. வணக்கம்...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/07/tamil-poets-in-blogs.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தனபாலன்...கவிதைக்க்காகவே அறிமுகப்படுத்தியிருக்காங்க...

      Delete

உங்க கருத்தை சொல்லலாம்.....