Saturday, 6 July 2013

உனக்கான பாதை...



உனக்கான என் பாதை 
ஏற்கனவே வகுக்கப்பட்டிருந்தது... 

அதில் தனியனாய் நடக்கிறேன் 
பிறிதொரு யோசனையும் இன்றி... 

நிசப்தத்தின் சரசரப்பிற்கு  
சலனமற்று திரும்பிப் பார்க்கிறேன்  

என் பின் 
ஏமாற்றத்தின் நிழலாய் நீ... 

உனக்கான என் பாதை 
இவ்வமயம் முற்றுப் பெற்றுவிட்டது....


6 comments:

  1. கவிதை அருமை...
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. /// நிசப்தத்தின் சரசரப்பிற்கு... /// அருமை...

    ஏமாற்றம் அப்படித்தான்...!

    ReplyDelete
  3. " நிசப்தத்தின் சரசரப்பிற்கு
    சலனமற்று திரும்பிப் பார்க்கிறேன் "

    அழகான வரிகள் தோழி. ஏமாற்றத்தினால் ஏற்படும் துயரை அழகாய் எடுத்துக் காட்டுகிறது.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் தமிழ்...நன்றி...

      Delete

உங்க கருத்தை சொல்லலாம்.....