Thursday, 27 June 2013

முடிவின் புள்ளி...




இரவின் நடுவில் உன்மத்தமான ஒரு முழிப்பில்
நெருடலின் தொடர் ஓன்று மனதுக்குள்
நிராகரிப்பின் வழியே நிஜத்தின் அறைகூவலாய்
எதற்கும் நீ இலாயக்கில்லை என்று சொல்லிச் சென்றது...

கவலையின் அலைகழிப்பில்
கண்ணீரின் கரை தென்படும் சாத்தியங்கள்
இல்லையென்பது மட்டுமே புரிந்து போனது...

பகிர்ந்துக் கொள்ள காத்திருக்கும் இரவுக்கு
வலி சுமந்த இழப்பின் அழுகுரலை
சத்தமின்றி எதிரொலிக்கத் தெரியவில்லை...

முடிவின் புள்ளியை நோக்கியே நகர்ந்தது
முடிக்கப்பட வேண்டிய கோலத்தின் இழை...

அன்பா பாசமா காதலா காமமா வெறும் பொருளா
இவற்றுள் ஏதோ ஒன்று மட்டுமே
துன்பத்தின் கருவை சுமந்திருக்கக்கூடும்...

வனாந்தரம் முழுமையுமான தேடலின் வலையில்
பிரதியெடுத்த காத்திருந்தது அந்த நீரோடை...

அதனுள் முழ்கியெழுந்த பொழுதில்
இதயம் பிளந்த முற்கள் தானாய் விலக
நீரின் ஸ்பரிசம் வலியை ரணமாக்கியது...

எழுந்தபோது தெறித்து விழுந்த துவலைகளில்
மகிழ்வின் தருணங்களை மட்டுமே மீட்டெடுத்து
கற்கள் தொட்டுக் கரைத் தாண்டி
கால்தடங்களில் இருந்து மண்ணெடுத்து
நிலவற்ற இரவின் நிசப்தத்தை
நிம்மதியுடன் கடக்கிறேன்...

3 comments:

  1. /// இதயம் பிளந்த முற்கள் தானாய் விலக...
    மகிழ்வின் தருணங்களை மட்டுமே மீட்டெடுத்து... ///

    அருமை...

    ReplyDelete
  2. எழுந்தபோது தெறித்து விழுந்த துவலைகளில்
    மகிழ்வின் தருணங்களை மட்டுமே மீட்டெடுத்து
    கற்கள் தொட்டுக் கரைத் தாண்டி
    கால்தடங்களில் இருந்து மண்ணெடுத்து
    நிலவற்ற இரவின் நிசப்தத்தை
    நிம்மதியுடன் கடக்கிறேன்...

    அருமையான நிகழ்வு..!

    ReplyDelete
  3. பெரிய ஆன்மாக்கள் கவிதையின் மைய கருத்தை உணர்ந்து கொண்டார்கள் ..நான் என்னும் தமிழ் பாடல்களுக்கு கோனார் தமிழ் கைடு தான் ..அதுனால பாடலுக்கான கோனார் கைடு ப்ளீஸ் ..

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....