Friday, 31 May 2013

தானாய் கிடைத்துவிடுவதில்லை....





நடப்பவை எதற்கும் காரணங்களை
நானாய் தேடிப் போவதில்லை
அவை தானாய் அமைந்துவிடுகின்றன
சில சமயங்களில் எனக்கு பிடித்து
பல சமயங்களில் என்னிலிருந்து வேறுபட்டு...

மனதில் சிலாகித்த நிமிடங்கள்
நிலைக்காமல் போய்விடுகின்றன
விழிநீரை வரவைப்பவையோ 
தூக்கத்தை தொலைக்கச் செய்கின்றன...

ஏதோ ஒரு கதவிடுக்கின் வழியே
தெரியவரும் வெளிச்சக் கீற்றுக்காய்
ஜன்னல் திறவாமல் விழித்திருக்கிறேன்

உலர்ந்து உதிர்ந்த சருகாய்
யாரோ ஒருவரின் காலடிபட்டு
நொறுங்கிக் கொண்டிருக்கிறேன்

எழுந்தால் வீழ்வது உறுதி என்று
எழாமலேக் கிடக்கிறேன்

நினைவுகளின் வாசல்களை அடைத்துவிட்டு
நிஜத்தின் சாவிகளை தேடுகிறேன் 
அவை மட்டும் தானாய் கிடைத்துவிடுவதில்லை......




9 comments:

  1. நிம்மதியான தூக்கம் உட்பட எதுவும் தானாக கிடைத்து(ம்) விடுவதில்லை...

    ReplyDelete
    Replies
    1. அதுவும் சரிதான்...

      Delete
  2. தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன் சகோ... நன்றி...

    ReplyDelete
  3. நட்பு மட்டும் அல்ல இந்த உலகில் எதுவும் தானாய் கிடைத்துவிடாது

    நல்லதொரு கவிதை

    ReplyDelete
  4. நட்பு இந்த உலகில் தானாய் கிடைத்துவிடாது

    ReplyDelete
  5. வாழ்க்கையின் சுவாரஸ்யமே இதுதானே! விதி என்று இருக்காமல் ஏதோ ஒரு நம்பிக்கையினால் தானே பயணித்துக்கொண்டிருக்கிறோம் நாம் எல்லோரும்.

    சோகமான வலியைச் சொல்லும் கவிதை!
    த.ம. 3

    ReplyDelete
  6. ஆம் நிஜத்தின் சாவிகள் அவ்வளவு எளிதாகக் கிடைத்துவிடுவதில்லை....

    ReplyDelete
  7. கவிதையின் இழை யோடி இருக்கும் மெல்லிய வலியின் வாசல்கள் படிக்கும் போது எங்களையும் அதனூடே வழிவிட்டு சஞ்சரிக்க செய்கிறது அருமையான வரிகள் வாழ்த்துக்கள்

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....