Thursday, 30 May 2013

ஒரு நிலவின் போது...





ஒரு நிலவின் போது
இருட்டின் மீது போர்த்தியிருந்தன
இருவரின் குரல்களும்...

தலை மீதிருந்த பூக்கள்
தலையணையில் கசங்கிய போதும்
மோகம் பூவிலில்லை என்கிறாய்
மறுக்கிறேன் நான்

ஒரு விடியலின் போது
கண்ணில் பட்டது
உறங்கிப் போய்விட்ட உறவின் சாட்சியாய்
உலர்ந்து போன பூவொன்று...

நிஜமெனப் பட்டது உன் வார்த்தைகள்...



12 comments:

  1. //மோகம் பூவிலில்லை// ;)))))

    அழகிய அர்த்தமுள்ள கவிதைக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி உங்களுக்கு...

      Delete
  2. அழகு...
    அர்த்தமுள்ளதாய் தெரிகிறது வாக்கியங்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா...

      Delete
  3. சூழல் உதவக் கூடும்
    முடிவெடுப்பது மனம்தானே
    மனம் தொட்ட கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா...

      Delete
  4. எல்லா காலங்களுக்கும், சந்தர்ப்பங்களுக்கும் பொருத்தமாக இருக்கும் உண்மையின் வரிகள் சிறிது காலம் கழித்தே வெளிப்படும் அதுதான் அனுபவ படிப்பு கவிதையின் உண்மை வரிகள் அருமை பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. அனுபவம் தான் பெரிய படிப்பு...உண்மை ராஜன்...

      Delete

உங்க கருத்தை சொல்லலாம்.....