Tuesday, 14 May 2013

இனி எல்லைக்கோடுகள் இல்லை...



சேகரித்து வைத்திருந்த
பழைய நட்பின் வார்த்தைகள்
அழகாயிருந்தன....

எல்லைக் கோடு தாண்டப்பட்ட இடத்தில்
அவை மரித்துப் போயிருந்தன...

நட்பு புதைக்கப்பட்ட இடம்
காதலின் ரோஜாவனமாகி இருந்தது...

எல்லைக் கோடுகள் எங்கும் உண்டு என்பதறியாமல்
வண்ண வண்ண வார்த்தைகள்
ரோஜாவை சிவந்துப் போகச் செய்திருந்தன...

சிறிது சிறிதாய் வார்த்தைகள்
சாயமிழந்து
காதலை புறந்தள்ளி
காயங்களை மட்டும் அலசி
நினைவுகளை மட்டும் மிச்சமாக்கிவிட்டு
மறைந்துப் போயிருந்தன...

சிறிது காலம் கழித்து
அதே நட்பின் வார்த்தைகள் தொடர்ந்தன
வாசங்கள் மரித்து போன ரோஜாவின்
சிவந்த நினைவுகளை சுமந்துக் கொண்டு....

17 comments:


  1. வணக்கம்!

    நட்புக்கேது எல்லை? நறுந்தமிழ்மேல் நாம்கொண்ட
    பற்றுக்கேது எல்லை பகா்!

    கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. ஆணுக்கும் பெண்ணுக்குமான நட்பின் எல்லை மீறுதல் தானே காதலை பிரசவிக்கிறது....

      Delete
  2. ஒரு எல்லைக் கோட்டை தாண்டும்போது இன்னொரு எல்லைக் கோட்டுக்குள் நுழைந்து விடுறீங்க. ஒவ்வொரு எல்லைக்குள்ளும் சட்ட திட்டங்கள் மாறாதா? இல்லை தாண்டப்பட்ட எல்லைக்கோட்டிலேயே, தாண்டிய அவள்/அவன் இருப்பதாக கறபனையில் வாழ்றீங்களானு தெரியலை, அகிலா!

    ReplyDelete
    Replies
    1. நட்பின் எல்லைக்குள் இருந்து காதலுக்குள் நுழையும் போதே அதன் அழுத்தங்களும் அதற்குரிய சட்ட திட்டகளுக்குள்ளும் தான் வாழமுடியும்...தாண்டப்பட்ட எல்லைக் கோட்டின் உணர்வுகள் அடியில் தங்கியிருக்கும்...அவை நீங்குவதில்லை..
      நடப்பில் இருந்து காதலுக்கு போய்விட்டு மறுபடி நட்பில் நுழையும் போது அது முழுமையாய் நட்பின் சாராம்சத்தை பெறுவதில்லை.

      சிறிது காலம் கழித்து
      அதே நட்பின் வார்த்தைகள் தொடர்ந்தன
      வாசங்கள் மரித்து போன ரோஜாவின்
      சிவந்த நினைவுகளை சுமந்துக் கொண்டு///

      பழைய காதலின் நினைவுகளை சுமந்துகொண்டு தான் இருக்கும்....

      ஆனால் நட்பில் இருந்து காதலுக்கு போவதென்பது ஒரு உயர் நிலைக்கு போவதாக மனதில் எண்ணப்படும். அதனால் நட்பின் பாதிப்பு அதில் இருப்பது குறைவு தான்....

      தளங்கள் வேறுபட்டாலும் அதில் உருட்டபடும் பந்து மனது தான். அதன் நினைவில் எதை உயர்வாய் நினைக்கிறதோ அதையே அடுத்தடுத்த தளங்களுக்கும் தூக்கி செல்லும்....
      நன்றி...

      Delete
    2. ****நடப்பில் இருந்து காதலுக்கு போய்விட்டு மறுபடி நட்பில் நுழையும் போது அது முழுமையாய் நட்பின் சாராம்சத்தை பெறுவதில்லை.***

      உண்மைதான். நீங்க அந்த எல்லையைக் கடந்துவிட்டால் கடந்ததுதான். மறுபடியும் திரும்ப வந்து "பழைய நட்பை" தேடினாலோ, புதுப்பிக்க நினைத்தாலோ, அது சாத்தியமல்ல.

      ஆனால், வெளிநாட்டுத் தம்பதிகள் பலர் திருமணம் காதலித்து செய்துவிட்டு, பல ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு, ஒருவரை ஒருவர் பிடிக்காமல் விவாகரத்து அல்லது பிரிந்துவாழ்ந்து கொண்டு மறுபடியும் வெறும் நண்பர்களாக இருக்கிறார்கள். What it means is, friendship is NOT as intimate as a "relationship" and the expectations are low in it. That's why it goes LONG WAY. Now you can say, friendship is a stronger relationship but IT IS DEBATABLE, not many would agree with that statement. Then you have to accept the fact that it depends on the individual.

      Delete
  3. //சேகரித்து வைத்திருந்த பழைய நட்பின் வார்த்தைகள் அழகாயிருந்தன.//

    அவைகளில் நல்லதொரு புரிதல் இல்லாத போலித்தனங்களும் சேர்ந்து இருக்கக்கூடிய வாய்ப்பு இருப்பதால், அவை அழகாக ஜொலித்திருக்கும்...... கவரிங் நகைகள் போல.

    //எல்லைக் கோடு தாண்டப்பட்ட இடத்தில் அவை மரித்துப் போயிருந்தன.//

    உண்மையான தூய்மையான மாசற்ற நட்பில் மட்டும் தான் எல்லைக்கோடுகளே தாண்டப்படும்.

    மாசற்ற அன்பினால் எடுத்துச்சொல்லும் உண்மைகள் சற்றே கசந்து வாட்டும் போது, ஏற்கனவே சேகரிக்கப்பட்ட பழைய நட்பின் வர்த்தைகளின் அழகு மரித்துத்தான் போகும்.

    ஒரிஜினல் தங்கம் இல்லை கவரிங் நகைகளே என்று சாயம் வெளுத்துப்போகும் போது மட்டுமே அந்த ஒரிஜினாலிடி இல்லாத கவரிங் அழகு மரித்துப்போகிறது. .

    ReplyDelete
    Replies
    1. நட்பின் பரிணாமங்கள் மாறுபட்டு போகும் போது அந்த வார்த்தைகள் சாயம் இழந்து போவதில் நியாயம் இருக்கிறது...நன்றி...

      Delete
  4. //சிறிது காலம் கழித்து அதே நட்பின் வார்த்தைகள் தொடர்ந்தன வாசங்கள் மரித்து போன ரோஜாவின்
    சிவந்த நினைவுகளை சுமந்துக் கொண்டு....//

    காதலுக்குத்தான் வாசங்கள் அவசியம் தேவைப்படும். காதல் ஏதும் இல்லாத தூய் நட்புக்கு அதெல்லாம் தேவையே இல்லை.

    தூய நட்பு கொண்டவருக்கு வாசங்கள் மரித்தே போகாமல் [அவர் / அவள்] மனதினில் எப்போதும் நீடித்தே இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. நட்பின் தூய்மை கேட்டு அது காதலாகி பின் பழையபடி நட்பாய் இருக்க முனைந்தாலும் அது நட்பின் இலக்கணத்துக்குள் அடங்குவதில்லை...அதில் எங்கே தூய நட்பை பார்க்க முடியும்...

      Delete
  5. உயிர்த்தெழுந்த உணர்வு போல...
    மீண்டும் துளிர் விடட்டும் நட்புணர்வு...
    உணர்சிகளில் வரும் குழப்பத்தால்
    உன்னதமான நட்பு குலைந்துவிடும்
    என உரைக்கும் அழகான கவிதை சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. அழகாக சொன்னீர்கள் மகேந்திரன்....நன்றி...

      Delete
  6. எல்லைக் கோடு தாண்டப்பட்ட இடத்தில்
    அவை மரித்துப் போயிருந்தன.

    எதுவுமே எல்லை தாண்டினால் மரித்துத்தான் போயிருக்கும் ...

    அளவுக்கு மிஞ்சினால் அமுதும் விஷமாகிப்போகும் ...!

    ReplyDelete
    Replies
    1. இருபாலாருக்கும் இடையிலான நட்பு என்பது கயிற்றின் மீது நடப்பது போல...நட்பை நட்பாய் வைத்திருப்பது சற்று கடினம் தான்...

      Delete
  7. அனைவரின் கருத்துக்களும் அருமை...

    ReplyDelete
  8. சகோதரி ,

    நட்பும் உருமாறி காதலாய்,காமமாய் மாறும் நடை அருமை .ஆண் ,பெண் உண்மையான நட்பு இன்றைய நடைமுறையில் அதிகம் கொச்சையாய் மாறி வருவது வருத்ததிற்குரியது ,உதாரணம் சில பள்ளி மாணவிகள் கருத்தரிப்பது கேவலமான சமூக முன் உதாரணம் .

    ReplyDelete
  9. உண்மைதான் அகிலா...நட்பை நட்பாய் தொடர ரொம்பவே பிரயத்தனப்ப்டவேண்டியிருக்கிறது.... எல்லையைத் தாண்டிய நட்பு திரும்ப நட்பாக வாய்ப்பு குறைவே... அப்படியே தொடர்ந்தாலும் அந்த நட்பில் ஒரு "க்" இருந்தே தீரும்.... இழப்பு...

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....