Monday, 4 February 2013

பார்த்தனாய் நான்...

தலைவன் தலைவியிடம்..


வட்ட நிலவை நீயென கொண்டாடியதும்
மலரை கொய்து உன் மணம் அதில் நுகர்ந்ததும்
சுட்டுவிடும் சூரியனை கூட தொட்டுவிட துடித்ததும்
ஓரக்கண் பார்வையிலே ஓராயிரம் கவிதை படித்ததும்
மார்பு சந்துகளில் என் முகம் சாய்த்து மலர்ந்ததும்
மெல்லிய உன் விரலின் நுனியில் என் உமிழ்நீரின் சுவை மாறியதும்
காதலை தாண்டி மோகனமாய் உன்னுள் என்னை மறந்ததும்....

இன்றேன்றில்லை என்றென்றுமே
உன் காதலின் பரி மீது
பார்த்தனாய் நான் மட்டுமே....  


9 comments:

  1. என்றென்றும் தொடரட்டும்...

    ReplyDelete
  2. உங்களது விருப்பம் தொடரட்டும் விரும்பியது கிடைக்கட்டும் மனம் குளிரட்டும்

    ReplyDelete
  3. ஏதோ காதல் கவிதை. தலைவன் தலைவி சம்மந்தப்பட்டது. அவ்ளோதான் புரியுது.

    C5H5N + NaNH2 -> C5H6N2 இந்த சமன்பாடு புரியுதா உங்களுக்கு? அதுமாரித்தான் எல்லாருக்கும் எல்லாம் புரியாது! :) அதனால் என்ன மன்னிச்சுடுங்க, அகிலா! :)

    ReplyDelete
  4. காதலின் பரியில் பார்த்தனாய் நான்...! அருமையான உவமை. அழகான கவிதை.

    ReplyDelete
  5. தலைவனின் வருகைக்கு பின் தோழிக்கு குறிப்புணர்த்தும் தலைவியின் மகிழ்ச்சி செய்தியாக எடுத்துக்கொண்டேன் ........அழகிய உவமை கலக்குங்க தோழி காலத்தை வெல்லும் காதலோடு

    ReplyDelete
  6. நிஜங்களா நிகழ்வுகளா, கவிதையா கற்பனையா,உண்மையா உணர்வுகளா ,எந்த வடிவில் பார்த்தாலும் நாயகியின் பாவம் அருமையாக பொருந்துகிறது ..classical ..வரிகள்

    ReplyDelete
  7. மார்பின் சந்துகள் என்று ஒரு புதிய சொல் பார்த்து மகிழ்ந்தேன்.உன் காதலின் பரி மீது பார்த்தனாய் நான் மட்டும் என்பது ஆண்நோக்குமொழிதலாய் இருக்கிறது.உன் காதல்பரி மீது ஆண்டாளாய் நான் மட்டும் இப்படி ஏதாவது வந்திருந்தால் நச் என்று பதிந்திருக்கும்.ஆனாலும் குறையில்லை.வாழ்த்துகள்.
    இரா.தெ.முத்து
    thisaichol.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. நான் இதை ஒரு ஆணின் பார்வையில் இருந்து தான் எழுதினேன். ஆனாலும் அழகாய் என் தடுமாறலுக்கு வழி சொல்லிவிட்டீர்கள்.....நன்றி....

      Delete

உங்க கருத்தை சொல்லலாம்.....