Wednesday, 2 January 2013

நகரும் என் நாட்கள்....



வாழ்க்கை முழுவதும் ஓடிய பயணத்தில் 
அவனின் அழகான மீசை வைத்த காதல் 
கடலில் கரைந்த மழைத்துளியாய் 
காணாமலே என்னை கரைத்தென்ன...

உனக்கும் எனக்குமாய் சொந்தமான 
பல நிமிடங்களின் சில மணித்துளிகள் 
நினைவில் நிழலாடும் போது 
இந்த உலகம் பொய்யாய் என் முன்னே...

காதலான அந்த நிமிடங்களில்
காமம் துளியும் இல்லை... 
அனுபவமான வார்த்தைகள் இல்லை...
அழகான காதல் மட்டுமே இருந்தது...

தொலைத்தோமே என்கிற முள்ளை விட 
தேடுகிறோமே என்பதே அதிக சுமையாய்....

என் மனதையே சுமை கல்லாக்கி
அவ்வப்போது மேலெழும் 
நினைவென்னும் நீர்க்குமிழிகளை அனுபவித்து 
சுகமாய் வாழ கற்றுக்கொண்டேன்...

நினைவில் நீயில்லாமல்
நிஜத்தில் நானில்லை 
நீயும் அப்படியே என்ற நம்பிக்கையுடன் 
நகரும் என் நாட்கள்...


14 comments:

  1. நகரும் நாட்கள் - நல்லபடியாகவே நகரட்டும்

    ReplyDelete
    Replies
    1. நகரத்தானே செய்கிறது நண்பா....

      Delete
  2. உண்மையான காதலர்களின் மன நிலையை படம் பிடித்து விட்டீர்கள்!

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்....நன்றி உஷா...

      Delete
  3. நம்பிக்கையுடன் நகரும்
    நந்தவன வாழ்க்கை....

    ReplyDelete
    Replies
    1. நன்றி மகேந்திரன்....

      Delete
  4. எங்க ஊரு டிவீ சேனல் ஒனுல அடிக்கடி காட்சிப்படுத்துவாங்க அதையே இங்கையும் சொல்லுறேன்
    நம்பிக்கைதான் வாழ்க்கை...:)

    ReplyDelete
    Replies
    1. சரியாய் சொன்னீர்கள்...

      Delete
  5. உங்களின் அழகான வரிகளால் காதல் இன்னும் அழகாக ஜொலிக்கிறது

    ReplyDelete
    Replies
    1. நினைவிலும் நிஜத்திலும் காதல் அழகானதுதான்....

      Delete
  6. தொலைத்தோமே என்கிற முள்ளை விட
    தேடுகிறோமே என்பதே அதிக சுமையாய்....நகரும் நாட்கள்...சுமைதான்....

    ReplyDelete
  7. நகரும் நாட்கள் சுமையாக இருந்தாலும் வேறு வழியில்லையே!
    சீக்கிரம் வரட்டும் நீங்கள் எதிர்பார்க்கும் அந்த 'அவன்'

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....