Friday, 28 December 2012

எனக்கு...




எனக்கு 
நீ தந்த கண்ணீரோ 
இந்த நிமிடம் உன்னை மன்னிக்கவிடாது 

நீ தந்த வலியோ 
அடுத்த நிமிடமும் உன்னை மன்னிக்கவிடாது 

இழப்பு யாருக்கு என்று நீ வினவலாம்

ரணமாக்கும் லாபத்தை விட 
திடமாக்கும் நஷ்டம் மேலென  நினைக்கிறேன்... 

உன்னால் 
மரத்து போய் வாழ கற்றுக் கொண்டேன் 
மறந்து போய் வாழ்வதைவிட...

20 comments:

  1. காதலர்களா ? கணவன் மனைவியா ?

    ReplyDelete
    Replies
    1. வலியை கொடுப்பதும் பெறுவதும் காதலர்கள்தான்...
      கணவன் மனைவியிடையே வருவது வலியாய் மாறாது...

      Delete
  2. மறந்து போய் வாழ்வதை விட... மரத்துப் போய் வாழ்தல்...! இந்த அனுபவம் எனக்கும் நேர்ந்ததுண்டு. ஆனால் இப்படி அழகான வரிகளில் சொல்லத்தான் தெரியவில்லை. மனதில் ஒட்டிக் கொண்டன வரிகள்.

    ReplyDelete
    Replies
    1. இந்த கவிதையை அனுபவித்து பார்க்கும்போது வலியின் உரசல்கள் தென்படும். உங்களின் பாராட்டு வார்த்தைகளுக்கு நன்றி கணேஷ்...

      Delete
  3. மறத்துப்போய் வாழ்தல்தான் கொடுமை. மறந்தாவது வாழ்ந்துவிடலாம். சில அன்பானவர்களை அவ்வளவு எளிதில் மறக்க இயலாது. நல்லாயிருந்துச்சு அகிலா..

    ReplyDelete
    Replies
    1. சரிதான் விச்சு...

      Delete
  4. மறந்து போவதை விட மறத்துப்போகக்கற்றுக் கொள்ளுவதுதான் யாதர்த்தம்.யதார்த்த வரிகள்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. யதார்த்தை புரிந்து கொண்டால் வாழ்வது எளிதாகிவிடும் விமலன்....

      Delete
  5. "மறந்து போய் வாழ்வதை விட" என்று சொல்லும்போதே மறக்க முடியாமல் தவிக்கும் உணர்வுகள் தெள்ளத் தெளிவாக தெரிகின்றது. வார்த்தைகளில் "வலி", அதனை நித்தமும் அனுபவிக்கின்றேன். நன்றி, அகிலா, எனக்காக எழுதியது போல் உணர்கின்றேன்!!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சிவா....மரத்து போய்விட்டால் கண்ணீர கூட காணாமல் போய்விடும்....

      Delete
  6. ரணமாக்கும் லாபத்தை விட
    திடமாக்கும் நஷ்டம் மேலென நினைக்கிறேன்.

    வலியின் வரிகள்...!

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்....ஆமாப்பா....

      Delete
  7. அருமை! நாளைய வலைச்சரத்தில் உங்கள் பதிவை பகிர்ந்துள்ளேன்!
    வருக! கருத்திடுக

    http://blogintamil.blogspot.in/

    ReplyDelete
    Replies
    1. உங்களின் பகிர்வுக்கு நன்றி உஷா....

      Delete
  8. Replies
    1. மிக்க நன்றி ராமமூர்த்தி...

      Delete
  9. இன்று வலைச்சரத்தில் உங்க பதிவை பகிர்ந்துள்ளேன்.வருக! கருத்திடுக!
    மிக்க நன்றி!

    http://blogintamil.blogspot.in/

    ReplyDelete
    Replies
    1. பார்த்துவிட்டேன்....நல்ல அறிமுகங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருகிறீர்கள்....நன்றி...

      Delete
    2. வலி மிகுந்த வரிகளுடன் வலிமை மிக்க கவிதை. பாராட்டுக்கள்.

      Delete
    3. நன்றி உங்களின் பாராட்டுக்கு....

      Delete

உங்க கருத்தை சொல்லலாம்.....