Friday, 30 November 2012

உன்னை என்





கண்ணுக்குள் வைத்திருந்தால் 
கனவு காண்கிறாய் என்றாய்... 

நெஞ்சுக்குள் பூட்டி வைத்தால் 
வேறு நினைப்பு இல்லையாயென்கிறாய்... 

உன்னை விட்டு விலகினால் 
நான் உன் எதிரியா என்கிறாய்... 

என்னை விட்டு போவென்றால்
என்னுயிரே நீதான் என்கிறாய்... 

நிஜமும் நிழலுமாய் 
இருந்து குழப்புகிறாய்...

நிழலாய் மட்டும் இரு 
நிஜம் வேண்டாம்....


12 comments:

  1. காதல் நோய் என்பதால் இந்த குழப்பம்

    ReplyDelete
  2. நிஜமும் நிழலுமாய்
    இருந்து குழப்புகிறாய்...

    நிழலாய் மட்டும் இரு
    நிஜம் வேண்டாம்....

    சின்னச்சிதறல்களின் அழ்கான தெறிப்பு !

    ReplyDelete
    Replies
    1. அழகான பாராட்டு ராஜேஸ்வரி.....நன்றி...

      Delete
  3. குழப்பம் இருந்தால் தான்
    தெளிவாகும் என்கிறீர்கள்.....
    சரிதான்...

    ReplyDelete
    Replies
    1. சில சமயங்களில் நிஜத்தை விட நிழல் சுகமானது...

      Delete
  4. குழப்பத்திற்கு பிறகு தானே நல்ல தீர்வே கிடைக்கும்.அழகான வரிகள்

    ReplyDelete
    Replies
    1. குழப்பமும் தீர்வும் இரட்டை குழந்தைதானே...நன்றி....

      Delete
  5. நிழலாய் இருந்தால் உண்மை தெரியாது. நிஜமும் வேண்டும்.

    ReplyDelete
  6. ஓடிப் போகாமல் இருந்தால் சரி... ஹிஹி

    ReplyDelete
    Replies
    1. இப்போ இருக்கிற காலத்தில ஓடிப்போனாலும் சரிதான்....

      Delete

உங்க கருத்தை சொல்லலாம்.....